பெங்களூரை சேர்ந்த 39 வயது பொறியியலாளர் ஒருவர் விற்பனை தளமான OLX இல் தன்னுடைய பயன்படுத்தப்பட்ட பெட் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்காக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி பெங்களூரின் இந்திரா நகரில் இருக்கும் ஒரு பிரபல பர்னிச்சர் கடையில் இருந்து பேசுவதாகவும் தன்னை ரோகித் சர்மா என்றும் ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அதே சமயம் பெட் வேண்டும் என்று விலையை அவர் உறுதிப்படுத்தியநிலையில்  upi மூலம் பணம் அனுப்புவதாக கூறியுள்ளார். சில நிமிடங்களில் மீண்டும் அந்த பொறியாளரை தொடர்பு கொண்டு உங்களுக்கு என்னால் பணம் அனுப்ப முடியவில்லை தவறாக நினைக்க வேண்டாம், உங்களிடமிருந்து ஐந்து ரூபாய் அனுப்புங்கள் அதனை தொடர்ந்து என்னால் பணம் அனுப்ப முடிகிறதா என்று பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

இதனை நம்பி ஐந்து ரூபாய் பணம் அனுப்பிய அவருக்கு பத்து ரூபாய் ரிட்டன் வந்துள்ளது. இவ்வாறு அதனை நம்பி அவர் பணம் அனுப்பிய நிலையில் உடனடியாக ஆன்லைன் லிங்க் மூலம் அவரிடம் இருந்து 68 லட்சம் ரூபாய் பணத்தை அந்த மர்ம நபர் திருடியுள்ளார். அதன் பிறகு தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த அந்த நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கட்டிலை விற்க முயன்று 68 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.