இந்தியாவில் மக்கள் பலரும் ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக புதிய விதிகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம். இருந்தாலும் ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு முதல் ரயில்வே விதிகளில் சில மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது.

அதாவது ஐந்து வயது முதல் குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் அவர்களுக்கு இருக்கை வழங்கப்பட மாட்டாது, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைக்கு தனி இருக்கையை முன் பதிவு செய்ய விருப்பம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதனைப் போலவே ஐந்து வயது முதல் 12 வயது வரை நான் குழந்தைகளுக்கு தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் டிக்கெட் கட்டணத்தில் பாதையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பெற்றோர் அல்லது உடன் வருபவர் இருக்கையில் பயணிக்கலாம். இருந்தாலும் ஐந்து முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான தனி இருக்கை அல்லது படுக்கையை முன் பதிவு செய்தால் முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது.