கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் யுவநிதி திட்டம் தொடர்பாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதாவது வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சி தேர்த லில் இந்த திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்த திட்டத்திற்கான பதிவு செயல்முறைகள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் இந்த திட்டத்தை முதல்வர் அறிவித்தபடி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2022-23 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்து ஆறு மாதங்கள் ஆனவர்கள் மற்றும் உயர்கல்வி அல்லது வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய், டிப்ளமோ முடித்தவர்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டம் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும் எனவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மாநில அரசின் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள், வருமானச் சான்றிதழ், மொபைல் எண், வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் போன்ற விவரங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்தில் சேரலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது