தன்னை இயேசுவின் இறைத்தூதராக கூறும் சர்ச்சைக்குரிய பாஜிந்தர் சிங் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பலாத்காரம் தொடர்பான வழக்கில் மோகாலி நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2018ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.
பஞ்சாபில் ஜலந்தர் மற்றும் மஜ்ரி பகுதிகளில் “Glory and Wisdom Church” என்ற பெயரில் பணியாற்றிய பாஜிந்தர் சிங் நோய்களுக்கும். வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் அதிசய சிகிச்சை அளிப்பதாகக் கூறி அவர் பிரபலமடைந்தார். பஞ்சாப் மாநிலம் சிராக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், பாஜிந்தர் சிங்கிடம் இருந்து தாம் உடல் மற்றும் மன வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறி 2018ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்த பெண் 2017-ல் தனது பெற்றோருடன் பாஜிந்தரின் கூட்டங்களுக்கு regularly சென்று வந்ததாகவும், 2020க்குள் அவரது “வழிபாட்டு குழு”வில் உறுப்பினராக இணைந்ததும், பாஜிந்தர் பெண்ணுடன் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார். பாஜிந்தர், அந்த பெண்ணின் கைபேசி எண்ணை பெற்று தவறான உரையாடல்கள் மற்றும் செய்திகளை அனுப்பியதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் தனியாக இருக்கும்போது அவரை கட்டாயமாக கட்டிப்பிடித்து தவறான வகையில் தொட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
சமீபத்தில், பாஜிந்தர் சிங் மீது மேலும் ஒரு பெண் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், தாக்குதல் மற்றும் சட்டவிரோத தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பஞ்சாப் போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். பாஜிந்தர் 40 வயது பெண்ணை தாக்கும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பல தரப்பில் கண்டனம் கிளம்பியுள்ளது.
