SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல்1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, மற்ற வங்கியின் ATMகளில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ATMகளை பயன்படுத்தினால் ₹20 + GST கட்டணமும், SBI ATMகளுக்கு ₹10 + GST கட்டணமும் வசூலிக்கப்படும். வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் போனால் ₹20 + GST கட்டணம் வசூலிக்கப்படும்.