SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ஏடிஎம்களை பயன்படுத்தினால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களுக்கு 10 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். மேலும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் போனால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.