விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் ரிலீஸாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்தப் படத்திற்குப் பிறகு வெளியாக வேண்டிய ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு கூட சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு மட்டும் தாமதமாவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், படத்திற்கு சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். படத்தின் தெலுங்கு பதிப்பை தான் பார்த்ததாகவும், தணிக்கை சான்றிதழைத் தடுக்கும் அளவிற்கு படத்தில் பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஏதோ ஒரு சான்றிதழை வழங்கி படத்தை வெளியிட அனுமதிக்கலாம், இதில் நெருக்கடி கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை” என்று சீமான் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
