அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தா.பலூர் மற்றும் சிலால் ஆகிய பகுதிகளில் 32 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் 15 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று கடை உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.