தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி, ரத்னம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விஷால் கடலூரில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மட்டும் எதற்காக 2 ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. கடந்த அரசும், இந்த அரசு அதைத்தான் செய்கிறது. சினிமாத்துறை மிகவும் கஷ்டப்படுகிறது. இந்த வருடம் 10 பெரிய படங்கள் வர இருப்பதால் அதற்காக அவர்கள் முன்கூட்டியே தியேட்டர்களை எடுத்துக் கொண்டார்கள். இதனால் சிறிய படங்கள் எப்படி வெளியாகும் என்பது புரியவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் படுகொலைகள் மிகவும் வேதனை தருவதாக இருக்கிறது. அரசு இப்போது எதற்காக சினிமாவுக்குள் வருகிறது என்பது புரியவில்லை. போன அரசு சினிமாவுக்குள் வரவில்லை. அரசு அவர்கள் துறையை கவனித்தால் மட்டும் போதும். சினிமாத்துறை சினிமா துறையாக இருந்தால் மட்டுமே போதும். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சொன்னால் நிச்சயம் களமிறங்குவேன். அரசியல்வாதிகள் நடிகர்களாக ஆகும்போது நடிகர்கள் ஏன் அரசியல்வாதிகளாக ஆகக்கூடாது என்ற கூறினார். மேலும் கடந்த அரசு என்று அதிமுக அரசை அவர் குறிப்பிட்டு  சினிமாத்துறைக்குள் அவர்கள் வரவில்லை எனவும் இந்த அரசு என்று திமுக அரசை  மறைமுகமாக குறிப்பிட்டு அவர்கள் சினிமா துறைக்குள் வருகிறார்கள் எனவும் நடிகர் விஷால் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.