நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில், உயிருக்குப் போராடிய இளைஞர் ஒருவரைக் எருமை மாடு ஒன்று காப்பாற்றி தெய்வமாக உருவெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வெளியாகி மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. சீறிப்பாய்ந்து வரும் வெள்ளப்பெருக்கில் தப்பியோட முடியாமல் இளைஞர் ஒருவர் நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில், மனித உயிரைக் காக்கும் தேவதையாக அங்கு வந்த எருமை மாடு ஒன்று, அந்த இளைஞருக்கு ஒரு மாபெரும் வாழ்வாதார நம்பிக்கையாக மாறியது. வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர், அருகில் மிதந்து வந்த எருமையின் வாலைச் சற்றும் யோசிக்காமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

மேலும் தன்னுடைய சொந்த உயிரையும் பொருட்படுத்தாமல், நீரின் கடுமையான ஓட்டத்தை எதிர்த்துப் போராடிய அந்த எருமை, தன் முழு பலத்தையும் திரட்டி நீந்திச் சென்று இளைஞரை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்து சேர்த்தது.

மனிதர்களிடையே சுயநலம் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில், ஒரு வாயில்லா ஜீவன் காட்டிய இந்த அசாதாரணமான உயிர்காக்கும் செயல், மனிதநேயத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் அன்பின் அடையாளமாக மாறியுள்ளது.

இந்த நெகிழ்ச்சியானக் காட்சியை அப்பகுதியில் இருந்த சிலர் தங்களது அலைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்த வீடியோ உலகளவில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த எருமையின் நெகிழ்ச்சியான செயலையும், சற்றும் தளராமல் கரை சேர்ந்த இளைஞரின் அதிர்ஷ்டத்தையும் பார்த்து லட்சக்கணக்கான இணையவாசிகள் நெகிழ்ந்துபோய் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>