தென் கொரியாவில் வசிக்கும் ஒரு இந்தியப் பெண் தனது காதலனின் குடும்பத்தினரை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி, பலரும் பாராட்டி வருகின்றனர்.
பியூஷா பாட்டீல் என்ற பெயருடைய அந்த பெண், தனது கொரிய காதலனின் வீட்டில் சந்திர புத்தாண்டு பண்டிகையை எவ்வாறு கொண்டாடினார் என்பதை வீடியோவில் பதிவு செய்துள்ளார். உணவு சமைப்பது முதல் சிறிய கலாச்சார நிகழ்ச்சிகள் வரை அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளன. குடும்பத்தினரின் அன்பான வரவேற்பு, பரிசுகள், இனிப்புகள் மற்றும் கூடுதலாக ஒரு பண உறையும் பெற்றதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பியூஷா கூறியதாவது, “முதல் நாளே அவர்கள் என்னை மிகவும் அன்பாக அணுகினார்கள். அவரது சகோதரிகள், மாமாக்கள் மற்றும் உறவினர்களுடன் மண்டு என்ற அரிசி கேக் உணவு தயாரிப்பில் உதவினேன். உண்மையில் அந்த அனுபவம் மிக வேடிக்கையானது.
சமையலறையில் அவர் அப்பா மற்றும் மாமா சமையல் செய்து கொண்டிருக்கும் போதே, நாங்கள் சிரிப்போடு கதைகள் பகிர்ந்துகொண்டோம். பின்னர் அவர் அப்பா, எனக்கு இந்திய உணவு பிடிக்கும் என்று நினைத்து, தயிர், கறி மற்றும் நானையும் தனியாக தயார் செய்திருந்தார்” என்றார்.
View this post on Instagram
“>
உணவு சாப்பிட்ட பிறகு, கொரிய குடும்பத்தின் பாரம்பரிய சடங்குகளும் நடந்தன. குழந்தைகள் மூத்தோருக்கு வணக்கம் செலுத்தினர், அதன் பின் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பியூஷாவும் இனிப்புகள், சாக்லேட்டுகள் மற்றும் பண உறையும் பெற்றார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “சகோதரி, நீங்க கோடிக்கணக்கான பெண்களின் கனவை வாழுறீங்க” என்று கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், “இது ஒரு கொரிய டிராமா மாதிரி தான் உள்ளது, மிகவும் அழகாக இருக்கிறது” என்றும், “உனக்காக இந்திய உணவு தயார் செய்த அவரது தந்தை எவ்வளவு சிந்தனைமிக்கவர்” என்றும் பாராட்டி வருகின்றனர்.
