கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கே.எம்.சஜ்ஜத் அலி. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு பின்னர் சோமேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சஜ்ஜத் அலியின் மருமகள் கடல் அலையில் தத்தளித்துள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் சஜ்ஜத் இறங்கினார். தனது மருமகளை வெற்றிகரமாக காப்பாற்றி விட்டார். ஆனால் பயங்கரமான அலையில் சிக்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.