திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிதி பங்களிப்புடன் 6.23 கோடி நிதி உதவி பல்வேறு மருத்துவ சேவைகளை நேற்று அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கஞ்சா கருப்பு விவகாரம் குறித்து பதில் அளித்தார். அதில், அடைமொழியை வைத்து என்னால் அவருடைய பெயரை கூற முடியாது. நடிகர் கருப்பு தன் மகன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனையில் இறந்தவர்கள் மருத்துவம் பார்ப்பதாக சினிமா வசனம் போல் பேசியுள்ளார்.

இந்த விவகாரம் பற்றி தெரிய வந்ததும் சென்னை மாநகர மேயர் அந்த மருத்துவமனையில் எத்தனை மருத்துவர்கள் இருக்கின்றனர், எத்தனை பேர் அன்று குறிப்பிட்டு இருந்த அரசு விடுமுறை நாளன்று பணியில் இருந்தனர் என்பது குறித்து அனைத்து தகவலையும் சமூக வலைத்தளத்தில் உடனே வெளியிட்டு இருந்தார். எனவே மேயர் கூறுவது தான் உண்மை. கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை என்று கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ருத்ரன் பதிவு செய்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் அரசு மருத்துவமனைகளில் நடக்கக்கூடிய சிறிய செய்தியாக இருந்தாலும் பெரிதாக திரிக்கப்பட்டு பதிவு செய்கின்றனர். அரசு மருத்துவமனை மக்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்வதால் சிலர் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் இது போன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.