தமிழக அரசு பெண் நடத்துனர் பணியிடங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பெண் நடத்துனர் பணியிடங்களுக்கு குறைவான அளவில் மட்டுமே பெண்கள் தேர்வாவதால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது குறைந்தபட்ச உயரம் 160 சென்டிமீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டது தான் பெண்கள்  நடத்துனர் பணியிடங்களில் அதிக அளவில் சேராததற்கு காரணம் என்று தமிழக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக தற்போது 160 சென்டிமீட்டரிருந்து 150 சென்டிமீட்டர் ஆக உயரத்தை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று அரசு பேருந்து ஓட்டுனர் பணிக்கு ஆண் பெண் என இரு பாலினத்தவரும் குறைந்தபட்சம் 45 கிலோ எடை இருந்தால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில் இருப்பவர்கள் பணிக்காலத்தின் போது இறந்தால் அவர்களின் வாரிசுகள் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு அந்த வேலை கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் இனி வரும் காலங்களில் தமிழகத்தில் பெண் நடத்துனர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.