கனடா கிரிக்கெட் அணியின் கேப்டன் போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டில் போலீசாரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேற்கிந்திய தீவில் பிறந்தவர் தான் நிக்கோலாஸ் கிர்டன். இவர் கனடா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவத்தன்று நிக்கோலாஸ் கிர்டன்  சர்வதேச விமான நிலையத்தில் ஒன்பது கிலோ கஞ்சாவை கடத்தி வைத்திருந்ததாக சுங்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் ஆனது கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.