கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-1 வகுப்பு மாணவன் ஒருவன், ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி ஒன்றை செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயலி மூலம் 21 முதல் 51 வயதுவரை உள்ள பல்வேறு ஆண்கள், திருமணமானவர்கள், குழந்தைகள் உள்ளவர்களுடன் வரை, அவனுக்கு இணையதளத்தில் அறிமுகம் ஏற்பட்டது. அதன் பின்னர், குறிப்பிட்ட சிலர் மாணவனை அறிமுகம் மூலம் நெருக்கமாக தொடர்பு கொண்டு, பின்னர் கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனை நேரடியாக வெளியில் தெரிவிக்காமல் இருந்த மாணவன், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி பெரியவர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் வந்து பாலியல் தொல்லை கொடுத்தபோது, அதைத்தடுக்க அவனது தாய் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
அப்போது குற்றவாளி தப்பியோடிய நிலையில், தாயின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் கதறிய சிறுவன், தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கொடுமைகளை எதிர்கொண்டான் என்பதை அழுது கூறியுள்ளார். அதன்பின் சைல்டு லைன் அமைப்பினரால், செந்தாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயபாரத் ரெட்டி நேரில் சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியானது. குழந்தையை வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைச் செயலி வழியாக தொடர்பு கொண்டு பல்வேறு ஆண்கள் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டிருந்தனர்.
இதனையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு போலீசில் பணியாற்றும் அதிகாரி, பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த ஒருவர், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 5 பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய காஞ்சங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு தனிப்படை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அரசியல் மற்றும் நிர்வாகத்துறை தொடர்புடைய நபர்கள் தொடர்புடையதாக இருப்பதும் இந்த வழக்கை மேலும் பெரிதாக்கியுள்ளது.
