ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலமாக ஓய்வூதியதாரர் உயிருடன் உள்ளார் என்பதையும் இதில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது. தற்போது 60 முதல் 80 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய மாதாந்திர ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஜீவன் பிரமாண பத்திரம் முக்கிய அம்சமாக உள்ளது.

இதனை ஜீவன் பிரம்மான் போர்ட்டல் , போஸ்டல் பேமென்ட் வங்கி, டோர் ஸ்டெப் வங்கி ஆகிய முறைகளின் மூலமாக சமர்ப்பிக்க முடியும். இந்த வருடம் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இதனை ஓய்வூதியத்தாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவ்வாறு சான்றிதழை சமர்ப்பிக்காத பட்சத்தில் ஓய்வூதியதாரர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.