தமிழக அரசியல் களத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வத்தின் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் அரசியல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் அணியின் செயல்பாடுகளில் சுணக்கம் நிலவுவதாலும், தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளில் தெளிவான நிலைப்பாடு இல்லாததாலும் அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், “எம்ஜிஆர் அதிமுக” (MGR AIADMK) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்த தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட, வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
