கர்நாடக மாநிலம் தாவங்கேரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஒரு முதியவர் தவறி விழுந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் போது அந்த முதியவர், அருகில் இருந்த மற்றொரு பயணியையும் தற்செயலாக கீழே இழுத்துச் சென்றார்.   அந்த வாலிபர் தண்டவாளத்தில் சிக்கிய நிலையில் முதியவர் கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பயணிகள் துரிதமாக செயல்பட்டு இருவரது உயிரையும் மீட்டனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Desi Cravings (@desi_cravings_)

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரயிலில் ஏற முயன்ற போது முதியவர் கால் தவறி கீழே விழ, அவரது ஆடையை பிடித்திருந்த மற்றொரு பயணியையும்  கீழே இழுத்தார். அதிர்ச்சியூட்டும் இந்த காட்சியில், இருவரையும் சில விநாடிகளில் பலர் சேர்ந்து காப்பாற்றும் முயற்சி பாராட்டப்படுகின்றது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது 17 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ளது.

இந்த சம்பவம், நகரும் ரயில்களில் ஏறும் போது ஏற்படும் அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. “மாமா ஓடும் ரயிலில் ஏறியது தவறு தான், ஆனால் மற்ற நபர் விழுந்ததற்குக் காரணம் அவரல்ல” என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். “அந்த நபர் கட்டுப்பாட்டை இழந்தது தான் காரணம்” எனவும் கருத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், “அந்த இருவரையும் காப்பாற்ற ஓடி வந்தவர்கள் உண்மையான நாயகர்கள்” என சிலர் பாராட்டியுள்ளனர்.  மேலும் ஓடும் ரயிலில் ஏறுவது ஆபத்தானது என்பதால் பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.