திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எம்.பி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே மேம்பால இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து பாம்பு சிறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரேம் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலையில் போட்டுவிட்டு சற்று தூரம் ஓடி நின்றார்.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றி சுமார் இரண்டு அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.