லண்டனில் உள்ள ஹடர்ஸ்ஃபீல்ட் வெஸ்ட் யார்க்ஸில் ஒரு பெண் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். லூசியும், கரேத்தும் கணவன் மனைவி ஆவர். நவம்பர் 10ஆம் தேதி லூசி மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் மூன்று முகங்களும் ஒரே மாதிரியாக இருப்பது டாக்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அவர்களுக்கு மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களின் மரபணுக்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்ற வழக்குகள் 200 மில்லியனில் ஒன்று என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.