தென்கொரியாவில் உள்ள யோன்பியாங் தீவை நோக்கி வடகொரியா தாக்குதல் மேற்கொண்டதாக தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டியதோடு தீவில் உள்ள மக்களை இடம்பெயர உத்தரவிட்டதாகவும் தெரிவித்திருந்தது.

இது குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்கை கிம் யோ ஜாங் கூறுகையில், தென்கொரியாவின் தீவில் எங்கள் இராணுவம் எந்த தாக்குதலும் மேற்கொள்ளவில்லை. ஆனால் 60 முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வெடி பொருட்களை வெடிக்க செய்து பார்த்தோம்.

அதன் முடிவும் நாம் எதிர்பார்த்தது போலவே இருந்தது. ஆனால் தென்கொரியா வெட்கம் இன்றி வெடிபொருட்களின் சத்தத்தை தாக்குதல் என்று பொய்களை உருவாக்கி விட்டனர். இனிவரும் காலத்தில் வடக்கு திசையில் வானத்தில் இடி இடிக்கும் சத்தம் கேட்டால் கூட அதை வடகொரியாவின் தாக்குதல் என்று மதிப்பிடுவார்கள் என கூறியுள்ளார்.