உலகிலேயே அதிவேக இணைய நெட்வொர்க் சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்த நெட்வொர்க்கில் ஒரு நொடிக்கு 1.2 டெராபைட்(1200 ஜிகா பிட்) வேகத்தில் தரவு அனுப்பப்படுகின்றது. இந்த திட்டத்தை சீனாவின் அரசுக்கு சொந்தமான மொபைல் நிறுவனமான சிங்குவா பல்கலைக்கழகம், Huawei மற்றும் cernet.com கார்ப்பரேஷன் இணைந்து உருவாக்கியது. இதன் மூலமாக வேகமான இணைய சேவை கொண்ட நாடாக சீனா உருவாகியுள்ளது. இந்த இணையதள சோதனை விரைவில் இந்தியாவிலும் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.