அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கதிரவன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைமை அதனை அதிரடியாக மறுத்துள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் தேவராஜன், தன்னிச்சையாக முடிவெடுத்த கதிரவனை தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கம் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி எனப் பேசப்பட்ட நிலையில், இந்தத் திடீர் திருப்பம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
