ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங் மூலம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 13 போட்டிகளில் விளையாடி 53 சிக்ஸர்களை விளாசியுள்ள அவர், ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிரிஸ் கெயிலின் வரலாற்றுச் சாதனையை நெருங்கியுள்ளார்.
மேலும் கெயிலின் இந்த நீண்டகால சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் வெறும் 6 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அபாரமான ஆட்டத்தைப் பார்த்து முன்னாள் வீரர்கள் பலரும் வியந்து போயுள்ளனர்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்று, இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடினால், வைபவ் சூர்யவன்ஷி கண்டிப்பாக கெயிலின் சாதனையை முறியடித்துப் புதிய வரலாற்றைப் படைப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்த இளம் வீரரின் அதிரடியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
