பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள ‘தகஸ் பள்ளத்தாக்கில்’ அமைந்துள்ள ‘சரஃபா லாம்’ என்ற பாதை, உலகின் மிக ஆபத்தான நடைபாதையாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில் இது மனிதர்கள் நடப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல இது விவசாய நிலங்களுக்கு நீர் கொண்டு செல்வதற்காகப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட ஒரு குறுகிய நீர்ப்பாதையாகும்.
இந்நிலையில் இதன் அகலம் வெறும் ஒரு அடிக்கும் குறைவாகவே இருப்பதால், இதில் நடப்பது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு சாகசமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆபத்தான பாதையின் ஒரு பக்கம் வானத்தை முட்டும் செங்குத்தான பாறைகளும், மறுபக்கம் நூற்றுக்கணக்கான அடி ஆழமான பள்ளமும் உள்ளது.
View this post on Instagram
“>
மேலும் பாதுகாப்பு வசதிகள் எதுவுமில்லாத இந்தப் பாதையில், தலைக்கு மேல் பாறைகள் இடிந்து விழும் அச்சமும், கால் தவறி கீழே விழுந்தால் உடல் கிடைப்பது கூட கடினம் என்ற சூழலும் நிலவுகிறது. இருப்பினும், இந்த இடத்தின் இயற்கை அழகால் ஈர்க்கப்பட்ட பல சாகசப் பயணிகள் உயிரைப் பணயம் வைத்து இங்கு செல்வது தொடர்கிறது. உள்ளூர் வழிகாட்டிகள் இன்றி இப்பகுதிக்குச் செல்வது தற்கொலைக்குச் சமம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
