உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில், கடந்த புதன்கிழமை இரவு கணவர் ஒருவரால் அவரது மனைவி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கஜ்னி பகுதியைச் சேர்ந்த மம்தா சவுகான் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது கணவர் விஸ்வகர்மா சவுகான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மம்தா மற்றும் விஸ்வகர்மா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்குப் 13 வயது மகள் உள்ளார். தம்முடைய மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த மம்தா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 8 மணி அளவில், புகைப்படம் எடுக்க ஸ்டுடியோவிற்குச் சென்ற மம்தாவை, கணவர் விஸ்வகர்மா சவுகான் பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஸ்டுடியோவிலிருந்து வெளியே வந்த மம்தாவை அவர் சந்தையின் நடுவே வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் துப்பாக்கியால் மம்தாவை சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மம்தாவை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்ததாலும், பலத்த காயங்களால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றவாளியான விஸ்வகர்மா சவுகானை பின்னர் கைது செய்துள்ளனர். இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கான காரணம் குடும்பத் தகராறே எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் கோரக்பூர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gorakhpur Horror: Woman Gunned Down by Husband Outside Photo Studio pic.twitter.com/exNUzhqvPX
— The Times Patriot (@thetimespatriot) September 4, 2025
