
பொதுவாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு நாளைக்கு சுமார் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். ஏனெனில் சீரான மனநிலையை பேணுவதற்கும், சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் தூக்க மனிதர்களுக்கு மிகவும் அவசியம். ஆனால் ஒருவர் தினசரி 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும் இதனால் தான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறி தற்போது அதிர வைத்துள்ளார். அதாவது ஜப்பான் நாட்டில் டைசுக்கே ஹோரி என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு தற்போது 40 வயது ஆகும் நிலையில் கடந்த 12 வருடங்களாக தினசரி 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறாராம். இதன் மூலம் தன்னுடைய வாழ்நாளை இரட்டிப்பாக அனுபவிப்பதாக அவர் கூறியுள்ளார். அவர் தன்னுடைய உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்திற்கு பழக்கப்படுத்தியதாகவும் இதன் மூலம் தன்னுடைய செயல்படும் திறன் மிகவும் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவருடைய அன்றாட செயல்பாடுகள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 நாட்கள் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அவர் குறைந்த அளவு தூங்கிய போதிலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டார். மேலும் உணவு உண்பதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாக உடற்பயிற்சி செய்தல் மற்றும் காபி குடித்தல் போன்றவைகள் தூக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஒருவர் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தொடர்ந்து தூங்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் சாத்தியமற்றது மற்றும் அறிவாற்றல் குறைபாடு, பலவீனமான நோயெதிர்ப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். செயல்பாடு, மற்றும் மரணம் கூட நிகழலாம்.
இது மாதிரி அவர் கூறியது கட்டுக்கதைகளிலிருந்து உருவாகலாம், ஆனால் அது அறிவியல் சான்றுகளால் ஆதரிக்கப்படவில்லை. மனித ஆரோக்கியத்திற்கு போதுமான தூக்கம் அவசியம், மேலும் பெரும்பாலான பெரியவர்கள் ஒழுங்காக செயல்பட இரவில் 7-9 மணிநேர தூக்கம் தேவை என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது