அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர்  பிரையன் ஜான்சன். கோடீஸ்வரரான இவர் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓவாகவும் செயல்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவர் இன்னமும்  18 வயது இளைஞன் போல் தோற்றமளிக்க ஆசைப்பட்டு அதற்காக அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதற்காக மகனின் ரத்தத்தை உடலில் செலுத்தி அவருக்கு இந்த சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் இதற்காக ஒரு நாளைக்கு 111 மாத்திரைகள் சாப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சிகிச்சைக்காக ஆண்டுக்கு ரூ.16 கோடி செலவிடுகிறார்.