உலகமே கொரோனாவை விட அதிக ஆபத்து நிறைந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரித்துள்ளார். இவர் கொரோனா தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகிறார். இந்த ஆய்வின் கட்டுரையில், 40 வகையான கொரோனா வைரஸ்கள் மனித குலத்தை தாக்கவிருப்பதாகவும், இதன் பாதிப்புகள் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்

இவர் வைரஸ்களைப் பற்றி ஆய்வு செய்து வைராலஜிஸ்ட் துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். குறிப்பாக விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்களைப் பற்றி மிகச்சிறந்த ஆய்வுகளைச் செய்ததால் “சீனாவின் பேட்வுமன்” (batwoman) என்று அழைக்கப்படும் ஷீ ஷெங்க்லி தான் இந்த திடீர் பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்.