இன்றைய காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் பலரும் பெண் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் வயதான தாத்தாக்கள் இளம் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி தற்போது பாகிஸ்தானை சேர்ந்த 110 வயது முதியவர் ஒருவர் நான்காவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்துல் ஹன்னாஸ் என்ற இந்த முதியவர் 55 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த முதியவருக்கு ஒரு டஜன் குழந்தைகள் உட்பட குடும்பத்தில் மொத்தம் 84 உறுப்பினர்கள் உள்ளனர். இவரின் மூத்த மகனுக்கு 70 வயதாகும் நிலையில் தான் தனிமையில் இருப்பதாக உணர்ந்த இந்த 110 வயது வாலிபர் ஐந்தாயிரம் வரதட்சணை கொடுத்து 55 வயது பெண் ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.