சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்த செயல்பாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தால் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா 4வது இடத்தை பெறும். சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை 6.04க்கு நிலாவில் கால் வைத்து வரலாறு படைக்க போகிறது.

இந்த நேரத்தை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் உள்ள அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குழந்தைகள் நேரத்தை குறிக்கும் வகையில் தரையில் அமர்ந்து இருந்தனர். மேலும், சந்திரயான்-3 தரையிறங்கும் தருணங்களை டிவியில் பார்த்து மகிழவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.