அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் உள்ள ஹோட்டல் அறைகளில் வாடகை பலமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் இப்போது முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அயோத்தியில் உள்ள ஹோட்டல் கட்டணம் ஒரு இரவுக்கு ரூ. 1 லட்சமாக உயர்ந்துள்ளதாகக் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவில் சினிமா பிரபலங்கள், அரசியல்  தலைவர்கள், தொழிலதிபர்கள் 7000 விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர்.