இந்தியாவில் மக்கள் பலரும் நிதி சார்ந்த தேவைகளுக்கு வங்கி கணக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பெரும்பாலானோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவ்வாறு வங்கி கணக்கு வைத்திருக்கும் போது கணக்கிலிருந்து நம்முடைய பணத்தை எடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று பலருக்கும் தெரியவில்லை. ஏடிஎம்மில் குறிப்பிட்ட முறை மட்டுமே இலவசமாக நாம் பணத்தை எடுக்க முடியும். அதன் பிறகு ஒவ்வொரு முறைக்கும் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை நேரடியாக எடுக்க கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

வருமான வரி சட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுக்கும் நபர்கள் இந்த தொகைக்கு டிடிஎஸ் செலுத்துவது அவசியம். மூன்று வருடங்களுக்கு வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் வருமான வரி செலுத்தும் நபர்கள் ஒரு நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் வரை பணத்தை எடுக்கலாம். இந்த வரம்புக்கு மேல் பணத்தை எடுக்கும்போது டிடிஎஸ் 2 சதவீதம் மற்றும் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுக்கும் போது இரண்டு சதவீதம் டிடிஎஸ் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.