OnePlus அதன் Nord CE3 Lite 5G ஸ்மார்ட்போனின் விலையை குறைந்துள்ளதாக சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அறிமுகத்தின் போது ​​8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.19,999 ஆகும். அதேசமயம் 256 ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.21,999 ஆகும்.
தற்போது இந்த விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.17,999 மற்றும் 256 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.19,999 ஆக குறைந்துள்ளது. இந்த மாதம் பண்டிகைகள் ஏதும் இல்லாத நிலையில், இந்த திடீர் விலைக்குறைப்பு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்துள்ளது.