உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் பயனர்களுக்காக ஸ்கிரீன்ஷாட் பிளாக்கிங் ப்ரொபைல் போட்டோ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுடைய சுயவிவர படத்தை தடுக்கலாம்.

இதனால் வேறு யாரும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது. பயனர்களின் தனி உரிமை கருத்தில் கொண்டு இந்த புது அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.