நடிகர் அஜித் குமார் மற்றும் ஷாலினி தம்பதியரின் அன்பும் பாசமும் வெளிப்படுத்தும் ஒரு க்யூட்டான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வரலட்சுமி நோன்பு விழாவை முன்னிட்டு, அஜித்தின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார் ஷாலினி. முதலில் இதனை அஜித் தடுத்து சிரித்தபடி நிறுத்தினார். ஆனால் சில நொடிகளில் மீண்டும் ஷாலினி காலில் விழ, அஜித் புன்னகையுடன் அவரை அரவணைத்து “வீட்டுக்கு போய் நான் விழணும்” என சொல்லி அனைவரையும் கவர்ந்தார்.
இந்த இனிமையான தருணம் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “காதல் மன்னன்” அஜித்தின் இந்த பாசமான செயலை பலர் பாராட்டி, #AjithKumar மற்றும் #Shalini ஹாஷ்டாக்களுடன் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள், “இவர்களின் உறவு எப்போதும் இப்படித்தான் இனிமையாக இருக்கட்டும்” என்று வாழ்த்தி வருகின்றனர்.
#Watch | “வீட்டுல போய்ட்டு நான் விழணும்..” 😅
அஜித்குமார் – ஷாலினியின் க்யூட் வீடியோ#SunNews | #AjithKumar | #ShaliniAjithkumar pic.twitter.com/WM0kai9uLr
— Sun News (@sunnewstamil) August 9, 2025
“>
