அவசர அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு சாவியை எடுக்க மறந்த வங்கி ஊழியர் ஒருவருக்கு, வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கும் இங்கும் திருதிருவென பார்த்துக் கொண்டிருந்த ஒரு மர்ம வாலிபர், ஸ்கூட்டியில் சாவி அப்படியே இருப்பதை மோப்பம் பிடித்துள்ளார். யாரும் பார்க்காத நேரம் பார்த்து, அந்த வண்டியை மிக நைசாக, அலேக்காக ஸ்டார்ட் செய்து நொடிப் பொழுதில் திருடிச் சென்றுள்ளார்.
வங்கியிலிருந்து வெளியே வந்து பார்த்த ஊழியர், தன் கண் முன்னே வண்டி காணாமல் போனதை அறிந்து உறைந்து போயுள்ளார். இந்த ஒட்டுமொத்தக் கொள்ளைச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அங்கும் இங்கும் திருதிருவென பார்த்து ஸ்கூட்டியை அலேக்காக திருடி சென்ற இளைஞர்..
வண்டியில் இருந்து சாவியை எடுக்க மறந்த வங்கி ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி#BikeTheft | #CCTV | #Police | #PolimerNews pic.twitter.com/MXCEOQkump
— Polimer News (@polimernews) May 31, 2026
“>
போலீசாரும் இந்த சிசிடிவி ஆதாரங்களை வச்சு அந்தத் திருடனை வலைவீசித் தேடி வருகிறார்கள்.!
