சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ஹென்றிச் கிளாசென், ஹைதராபாத் பிரியாணியைச் சாப்பிடும்போது காரம் தாங்க முடியாமல் கண்ணீர் வடித்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஹைதராபாத் பிரியாணி அதன் காரத்திற்குப் பெயர் பெற்றது. அதனை ஆசையாகச் சாப்பிடத் தொடங்கிய கிளாசெனுக்கு, அந்த அதீத காரம் பெரும் சவாலாக மாறியது.
சில கவளங்கள் சாப்பிட்டதுமே காரம் நாவைக் சுட, கண்கள் சிவந்து அவர் அழத் தொடங்கினார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து பிரியாணியைச் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த இஷான் கிஷன் மற்றும் சக வீரர்கள், கிளாசெனின் இந்த அவதியைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தனர்.
<a href=”http://
Heinrich Klaasen and Ishan Kishan having Hyderabad Biriyani. 🧡
Too Spicy for Klaasen! 😂
📸 ~ nitiskumarredy (instagram) pic.twitter.com/9QJkoAXRTs
— ORANGE ARMY (@SUNRISERSU) April 6, 2026
“>
கிளாசென் தனது வியர்வையையும் கண்ணீரையும் துணியால் துடைத்துக் கொள்ளும் காட்சியை நிதிஷ் குமார் ரெட்டி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “அவர் திணறும் ஒரே நேரம் இதுதான்” என்ற கிண்டலான குறிப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
