துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் 40 நிமிடம் தவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு விமானத்தில் சென்றார். அங்கு மோசமான வானிலை நிலவியதால் தரையிறங்க முடியாமல் விமானம் நடுவானில் ஆறு முறை வட்டமடித்ததாக கூறப்படுகிறது. அவர் வந்த விமானம் பிற்பகல் 3:25 மணிக்கு தரையிறங்க வேண்டியது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 4.05 மணிக்கு விமானம் தரையிறங்கியதாக சொல்லப்படுகிறது.