சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதேபோன்று சிறந்த வீராங்கனைகாண பரிந்துரை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இலங்கையைச் சேர்ந்த விஷ்மி குணரத்னே, இங்கிலாந்தின் மாயா பவுச்சியார் ஆகியோர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரராக பும்ரா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற நிலையில் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
