சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் ஒரு காணொளி, இந்திய குடும்பங்களில் ஆண்கள் எதிர்கொள்ளும் மறைமுக அழுத்தங்களையும், “நிபந்தனையுடனான அன்பு” பற்றிய புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனரான இயக்குனர் தயால் பகிர்ந்த இந்த வீடியோ, பலரின் மனதில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபத்தில் நிறுவனம் ஒன்றில் இருந்த தனது வேலையை ராஜினாமா செய்த தயால், அதன் பின்னர் வீட்டில் தனது மேல் நடந்த மாற்றத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார். சம்பளம் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தன்னை மிகுந்த அன்பும், மரியாதையும் காட்டிய தாயார், உணவு நேரத்தில் கூடுதல் ரொட்டிகள் வழங்கி பாராட்டுவார் என அவர் கூறுகிறார். “என் மகன் சம்பாதிக்கிறான், அதனால் அவனுக்கு அதிக ரொட்டி கொடுக்க வேண்டும்” என எண்ணிய தாயின் அந்த அன்பை நினைவுகூரும் அவர், அது தன்னிடம் காட்டப்பட்ட “நன்றியுணர்வு” என விளக்குகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Director Dayal (@director_dayal)

ஆனால் வேலைவிட்ட மூன்று நாட்களிலேயே சூழ்நிலை மாறிவிட்டதாக அவர் கூறுகிறார். சமீபத்திய இரவு உணவின் போது இரண்டு ரொட்டிகள் கூடுதலாக கேட்டபோது முந்தையபோல் அன்பான பதில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, அவரது தந்தை தாயிடம் “அவனுக்கு இரண்டு ரொட்டிகள் வேண்டும், கொடுங்கள்” என்று சொன்ன நிகழ்வை தயால் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் வீட்டில் தன்னிடம் காணப்பட்ட மரியாதை, வழங்குநரென தன்னை நிரூபிப்பதில்தான் இருந்தது என்பதை உணர்ந்ததாக அவர் கூறுகிறார்.

“உங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே மதிப்பு கிடைக்கும்; இல்லையெனில் கிடையாது. எனவே எப்படியாவது சம்பாதியுங்கள்” என உணர்ச்சியோடு கூறும் தயாலின் வீடியோ “பெற்றோருக்குக் கூட ஏழை மகனைப் பிடிக்காது” என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ளது.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது. பலரும் இதை “வாழ்க்கையின் கடுமையான உண்மை” என்று கருத்து தெரிவிக்க, சிலர் “சமூகமே இப்படித் தான் செயல்படுகிறது” என கூறுகின்றனர். அதே நேரத்தில், பலர் தயாளுக்கு உற்சாகம் அளித்து, இந்த கடினமான கட்டத்தை அவர் கடந்து செல்வார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.