திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்கான டோக்கன் காலை 9 மணி முதல் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. இதனை tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை வைத்து  இலவசமாக டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.