நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தற்போது உள்ள எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே மறு சீரமைப்பு ஆணையம் அமைப்பதை ஆதரிப்பது சிறப்பு அந்தஸ்து நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக விளங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.