இந்திய அஞ்சல் துறையில் காலியாகவுள்ள சுமார் 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியாகிய நிலையில், அதற்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நெருங்கி விட்டது. கிராமின் தக் சேவக்ஸ் (GDS) பணியிடத்திற்குரிய விண்ணப்பம் சென்ற ஜன,.27ம் தேதி துவங்கியது. இந்த GDS பணியிடம் வாயிலாக கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), அசிஸ்டெண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) போன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப இருக்கிறது.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பிப். 16ஆம் தேதி கடைசி நாள் என இந்திய அஞ்சல் துறை அறிவித்து உள்ளது. அதோடு விண்ணப்பித்தில் பிழையை திருத்த பிப். 17-19 ஆம் தேதிவரை வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அஞ்சல் துறையிலும் கல்வித் தகுதி என்பது மிகவும் அவசியமானது ஆகும். எனினும் குறைந்தபட்சம் இதற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பை நிறைவு செய்திருந்தால் போதும். அத்துடன் 10ம் வகுப்பில் ஆங்கிலத்திலும், கணிதத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் உள்ளூர் மொழியை குறைந்தது 10ம் வகுப்பு வரையில் கற்று தேர்ந்திருக்கவேண்டும் என்றும்  கூறப்பட்டுள்ளது. இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வயது வரம்பும் இந்திய அஞ்சல் துறையால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2023 பிப். 16ம் தேதியன்று குறைந்தபட்சம் 18 வயதுடையவர்களும், அதிகபட்சம் 40 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா அஞ்சல் துறையின் ஆள்சேர்ப்பில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தவேண்டும். இதற்கிடையில் பெண்கள், பட்டியல் சமூகத்தினர், பட்டியல் பழங்குடியினர், PwD, மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியானவர்கள் www.indiapostgdsonline.in எனும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.