தனியார் மற்றும் பொதுத் துறை என அனைத்துவித வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது  வழக்கமான சேமிப்பு வங்கிக் கணக்குகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை சராசரி மாதாந்திர இருப்பாக (AMB-Account Minimum Balance) பராமரிக்கவேண்டும். எனினும் ஒவ்வொரு வங்கிக்கும் AMB வேறுபடுகிறது. நகர்ப்புறம், மெட்ரோ, அரை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாடிக்கையாளரின் சேமிப்புக்கணக்கு உள்ள இடத்தையும் AMB சார்ந்து உள்ளது. AMB தேவைகளை பூர்த்தி செய்ய தவறினால், வங்கியால் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ICICI வங்கி

இந்த வங்கியின் வழக்கமான சேமிப்புக்கணக்கிற்கு, கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச மாதம் சராசரி இருப்புத்தொகையாக ரூ.10,000 மெட்ரோ (அ) நகர்ப்புற பகுதிகளுக்கும், ரூ. 5,000 அரை நகர்ப்புற இடங்களுக்கும், ரூ.2,000 கிராமப்புற இடங்களுக்கும் பராமரிக்க வேண்டும். சராசரி இருப்புத் தொகையை பராமரிக்க தவறியவர்களுக்கு வங்கி பற்றாக்குறையில் 6%(அ)ரூ.500, எது குறைவாக இருப்பினும் அபராதமானது விதிக்கப்படுகிறது.

SBI  வங்கி

2020-ம் வருடம் முதல் SBI தன் அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கான AMB தேவையை தள்ளுபடி செய்து உள்ளது. முன்பாக SBI கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு வைத்திருக்கும் இருப்பிடத்தை பொறுத்து மாதம் சராசரியாக ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 பேலன்ஸ் வைத்திருக்கவேண்டும். AMB பராமரிக்கத் தவறியவர்களுக்கு ரூ.5 முதல் 15 வரை அபராதம் மற்றும் பொருந்தக்கூடிய வரிவிகிதங்கள் விதிக்கப்பட்டது. கூடுதலாக தங்கள் சேமிப்புக்கணக்கில், அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனைகளில் பலன்களை SBI வழங்குகிறது.