தற்போது ATM-களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டு உள்ளது. டெபிட் (அ) கிரெடிட் கார்டுகளுக்கு பதில் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் (அ) டெபிட் கார்டு இன்றி ATMல் இருந்து பணத்தை எடுப்பதன் நன்மை என்னவெனில், கார்டு தொலைந்து போனது, தவறான பின்களால் நிராகரிக்கப்பட்ட டிரான்ஸாக்ஷன்கள் மற்றும் ஏடிஎம் கார்டு திருட்டு ஆகிய சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம். இப்போது ATM மையத்தில் டெபிட் கார்டு இன்றி எப்படி பணம் எடுக்கலாம் என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்..

அதன்படி, ஏதேனும் ATM மையத்துக்கு சென்று “வித்ட்ராவ்” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். ATM இயந்திரத்தின் திரையில், UPI ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் ஏடிஎம் திரையில் நீங்கள் கியூஆர் குறியீட்டைப் பார்ப்பீர்கள். உங்களது மொபைலில் ஏதேனும் யூபிஐ பேமெண்ட் ஆப்ஸை துவங்கி, கியூஆர் ஸ்கேனர் குறியீட்டை செயல்படுத்தவும். குறியீட்டை ஸ்கேன் செய்தபின், நீங்கள் திரும்பப்பெற விரும்பும் தொகையை உள்ளிடவும். பணத்தை எடுப்பதற்கு தொடரவும் என்பதை கிளிக் செய்து யூபிஐ பின்னை உள்ளிடவும்.