நம் நாட்டின் பிரபல உணவு விநியோக செயலியான சொமேட்டோவானது (Zomato), அதன் 3ஆம் காலாண்டுக்கான வருமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் நிறுவனம் ரூபாய்.346.6 கோடி நஷ்டமடைந்துள்ளது. இதனால் 225 சிறிய நகரங்களில் தன் சேவைகளை நிறுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக Zomato நிறுவனம் கூறியதாவது, இந்த நகரங்களின் சேவைக்கான வரவேற்பு ஊக்கமளிக்கும் அடிப்படையில் இல்லாததால்  நிறுத்தப்படுவதாக தெரிவித்து உள்ளது.

ஜனவரியில் 225 நகரங்களில் உணவு விநியோக சேவையை நிறுத்தி இருப்பதாக அந்நிறுவனம் தன் நிதி வருவாய் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. சொமேட்டோ கருத்துப்படி இந்நகரங்கள் டிசம்பர் காலாண்டின் மொத்த வருவாயில் 0.3% மட்டுமே ஆகும். இருப்பினும் எந்தெந்த நகரங்களில் அதன் வசதிகள் மூடப்பட்டுள்ளது என்பது பற்றி நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.