நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வங்கி ஊழியர்களின் பென்ஷன் உயர்வு தொடர்பான பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பக்வத் காரட் பதிலளித்தார்.

அவர் வங்கி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிவாரணம் முறையே வழங்கப்படுகிறது. அதன் பிறகு இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் வங்கி ஊழியர்களின் சங்கங்கள் மற்றும் இந்திய வங்கிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. மேலும் ஒரு பொது துறை வங்கிகளின் ஓய்வூதிய புதுப்பிப்பு விவகாரம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு தன்னுடைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.