டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 253 ரன்களைக் குவித்திருந்தாலும், இங்கிலாந்து வீரர்கள் கடைசி ஓவர் வரை வெற்றிக்காகப் போராடினர்.
இதனால் மைதானத்தில் இருந்த முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவருமே மிகுந்த பதற்றத்துடன் ஆட்டத்தைக் கவனித்து வந்தனர். ஆட்டத்தின் 18-வது ஓவரை பும்ரா வீசியபோது, ஒரு பந்தை சாம் கர்ரன் தடுக்க, அது நேராக பும்ராவின் கைக்கே சென்றது. இதைப் பார்த்த சாக்ஷி, அது ‘கேட்ச்’ என நினைத்து உற்சாகத்தில் சோபாவிலிருந்து எழுந்து குதிக்கத் தொடங்கினார்.
Us Sakshi Us 😭😭😭🤣🤣 #MSDhoni𓃵 #dhoni pic.twitter.com/ByaM5z8EWD
— Reetu🦄 (@reetu_chet77575) March 5, 2026
“>
ஆனால், அது கேட்ச் இல்லை என்பதை உணர்ந்த தோனி, உடனே சாக்ஷியைத் தடுத்து, “இது அவுட் இல்லை, அமைதியாக உட்கார்” என சைகை காட்டினார். தோனியின் இந்த ரியாக்ஷன் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
